5.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜார்க்கண்ட் முதலமைச்சராக 3ஆவது முறையாக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ராஜஸ்தானில் பாஜகவை சேர்ந்த கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகல். தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்த சொந்த தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வி காரணமாக இந்த முடிவு.
* தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். எம்.எல்.சிக்கள் 6 பேர் காங்கிரசுக்கு தாவல்.
* இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மாநில கட்சிகளை அழிக்கும் பாஜக தான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.
தி டெலிகிராப்:
* அக்னிபத் திட்டம் மீதான தாக்குதலை காங்கிரஸ் விரிவுபடுத்துகிறது, அக்னி வீரர்களுக்கு இழப்பீடு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று ராஜ்நாத் சிங்கின் கூற்றுக்கு எதிராக — அஜய் யின் தந்தை அரசாங்கத்திடமிருந்து எந்தப் பணத்தையும் பெறவில்லை என்று கூறிய பதிவுடன். ராகுல் ஒரு காட்சிப் பதவை வெளியிட்டார்.
* ஹத்ராஸ் நெரிசல் மரணம் தொடர்பான சொற்பொழிவு கூட்டத்தை நடத்திய சாமியார் சூரஜ்பால் என்ற நாராயணன் சாகர் ஹரி என்கிற போலே பாபா மீது இப்போது வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வில்லை. நெரிசலில் இறந்தவர்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அங்கிருந்து சாமியார் தப்பி ஓட்டம்.
* அதிகாரம் மிக்க அரசாங்கம் ஊடகவியலாளர்களை வழிநடத்துகிறது, பயமுறுத்துகிறது, வாய்மூடி, அச்சுறுத்துகிறது என்று ஊடகவியலாளராக மாறிய திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர் சகரிகா கோஸ் தனது முதல் நாடாளுமன்ற உரையில் சாடல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மக்களவையில் பிரதமர் மோடி, அனுராக் தாக்கூரின் தவறான அறிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மக்களவை தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment