சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு குரூப் தேர்வுகளை எழுதியவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 98 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது மேலும் சிலருக்கு இதேபோல் பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 08.03.2024 முதல் 30.04.2024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1இல் அடங்கிய பதவிகளுக்கு 94 நபர்களும், தொகுதி II இல் அடங்கிய பதவிகளுக்கு 47 நபர்களும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 851 நபர்களும். தொகுதி VA தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 165 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1163 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு:
இதையடுத்து கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 குரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மய்யங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது. டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப் புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன.
டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
பணியாணை அனுப்பி வைப்பு:
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு குரூப் தேர்வுகளை எழுதியவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 98 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது மேலும் சிலருக்கு இதேபோல் பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பலருக்கு 3.7.2024 அன்று வேலை வாய்ப்பு ஆர்டர் வழங்கப்பட்டது. . தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
மொத்தமாக 5 சிறை அலுவலர் மற்றும் 44 உதவி சிறை அலுவலர் பணியிடங்களுக்கு முன்னர் தேர்வு நடத்தப்பட்டது. இதில் வென்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.முன்னதாக குரூப் 4இல் 6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று (3.7.2024) 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது இதற்கு விரைவில் ரிசல்ட் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.