சென்னை, ஆக. 23 – மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டை போற்றும் வகையிலும், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தமிழ்நாடுஅரசின் திட்டத்துக்கு ஒத்துழைக்கும் விதமாக பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் போதைப் பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘உறுதி’ குறும்படத்தை வெளியிடும் விழா சென்னை சாலி கிராமத்தில் நேற்று முன்தினம் (21.8.2023) நடந்தது.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘உறுதி’ குறும் படத்தை வெளியிட்டார்.
தமிழ்நாடு எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியின் தலைவர், நடிகர் ராஜேஷ் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து, குறும் படத்தை பெற்றுக்கொண்டார்.
விழாவில் அமைச்சர் எஸ்.ரகு பதி பேசியதாவது:
போதைப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையாகி விட்டால், அவரது வாழ்க்கை அத்துடன் தொலைந்து விடும். அதிலிருந்து மீள முடியாது. வெளியே வரமுடியாது. எனவே போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து இளை ஞர்கள் திருந்த வேண்டும். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருந்தால் வாழ்வில் நிச்சயம் முன் னேற முடியும்.
சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் முகம்மது ரபி, இயக்குநர் மங்கை அரிராஜன், ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி, கோட்டை அப்பாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.