சென்னை, ஆக. 23 – “சமூக நீதியின் அடிப்படையில், இதுவரையில் டிஎன்பி எஸ்சி தலைவர் பதவியில் நியமிக்கப் படாத ஒரு சமுதாயத் தைச் சேர்ந்தவரை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. அதை ஆளுநர் புறக்கணித்திருப்பது கண்டனத் துக்குரியது” என்று திமுக அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவா லயத்தில் திமுக அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி செவ்வாய்க் கிழமை செய்தியாளர்களைச் சந் தித்தார். அப்போது அவர் கூறியது: “கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், ஒதுக்கப் பட்ட அல்லது பிரதிநிதித்துவம் இல்லாத சமுதாயத்தைச் சேர்ந்த வர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்க வேண்டும் என்று எண் ணினார். அதே நோக்கத்துடன் தான், இன்றைக்கு டிஎன்பிஎஸ்சி தலைவராக இதுவரை எந்த சமு தாயத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந் தெடுக்கப்படவில்லையோ, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் வழியிலே தமிழ்நாடு முதல மைச்சர் ஸ்டாலின் தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியிருக்கிறார்.
1930-ல் இருந்து டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டவர்க ளின் பட்டியல் என்னிடம் உள் ளது. அவ்வாறு நியமிக்கப்பட்டவர் களில், எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரை தலைவர் பதவிக்கு வர வில்லையோ, அந்த சமு தாயத்தில் இருந்து ஒருவரான ஓய்வுபெற்ற டிஜிபியும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி, எந்தவிதமான விமர்சனத் துக்கும் உள்ளாகாமல் தன்னுடைய பணியை செய்த, அனைத்து தரப் பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப் பியது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள ஆளுநர் மறுப்பது ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான். டிஎன்பி எஸ்சியில் கடந்த காலங்களில் ஏராளமான முறை கேடுகள் நடந்துள்ளன. உச்ச நீதி மன்றம் வரை சென்று அந்த முறை கேடுகள் எல்லாம் நிரூபிக்கப்பட்டிருக் கிறது. எனவே, இனிவரும் காலங்களில் அதுபோல இருக்கக்கூடாது என்ப தற்காக காவல்துறையில் டிஜிபி யாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவரை தமிழ்நாடு அரசு பெருந்தன்மையு டன் நியமித்து அனுப்பியது. அதை ஆளுநர் புறக்கணித்திருப்பது கண் டனத்துக்குரியது.
சமூக நீதியின் அடிப்படையில், இதுவரையில் டிஎன்பிஎஸ்சி தலை வர் பதவியில் நியமிக்கப்படாத ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை தமிழ் நாடு அரசு நியமித்திருக்கிறது. எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஆளுநர் மறுபரி சீலனை செய்து ஆளுநர் உடனடி யாக சரிசெய்ய வேண்டும். அதே போல், இன்றைய தினம் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. ஆளுநர் தனது முகநூலில் ‘மெட் ராஸ் டே’ என்று பதிவிட்டுள்ளார். மெட்ராஸ் என்ற பெயரை மாற்றி ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகிறது. அதன்பிறகும் ஆளுநர் மெட்ராஸ் என குறிப்பிடுவது தமிழ்நாடு மக் களை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுகிறார். தமிழ்நாடு என்று சொல்லவும் மறுக்கிறார். சென்னை என்று சொல்லவும் மறுக்கிறார். அதுபோல், தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள பாடத் திட்டத்தைப் பின்பற்றக் கூடாது என்ற உத்தரவையும் பல்கலைக்கழகங் களுக்கு பிறப்பிக்கப்போவதாக கூறியிருக்கிறார்.
எனவே, ஆளுநர் திட்டமிட்டு ஒரு சதியை, குழப்பத்தை உரு வாக் குவதற்காக ஆளுநர் செயல்படு கிறார். ஆளுநரின் இந்த நடவடிக் கைகளை தமிழ்நாடு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இதற்கு உரிய விலையை ஆளுநர் ரவி தர வேண்டியது இருக்கும்” என்று அவர் கூறினார்.