4.7.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
மாநிலங்களவையில் மணிப்பூர் எம்.பி. பேச அனுமதி மறுப்பு; காங்கிரஸ் கண்டனம்.
ஹத்ராஸ் பலி: சாமியார் மற்றும் உ.பி. அரசு பொறுப்பேற்பார்களா? தலையங்க செய்தி.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினால், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட வாய்ப்பு.
நீட் தேர்வை முற்றிலும் நீக்க நடிகர் விஜய் ஆதரவு; திமுக இளைஞரணி நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்.
பிணையில் வெளிவந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
புதிய குற்றவியல் சட்டங்களின் ஹிந்திப் பெயர்கள்; அது எங்கள் இஷ்டம்; உரிமை என ஒன்றிய அரசின் சார்பில் வழக்குரைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்.
தி டெலிகிராப்
குற்றம் சாட்டப்பட்டவர் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. மணிப்பூர் அரசை நம்ப வேண்டாம்: குகிக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். உடனே சிகிச்சை அளித்து அறிக்கை அளித்திட உத்தரவு.
கல்வியில் பீகார் பிற்படுத்தப்பட்டோர் பின்னடைவை சுட்டிக்காட்டி, 65 சதவீத இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் நிதிஷ் அரசு வாதம்
தி இந்து
கியூட், நீட் தேர்வு காரணமாக, உயர் கல்வி கற்க இளைஞர்களை வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்துகிறது மோடி அரசு என காங்கிரஸ் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
அரசமைப்புச் சட்டம் மற்றும் அம்பேத்கர் குறித்து காங்கிரசை தாக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 1950இல் அரசமைப்புச் சட்டத்தை எழுத்துப்பூர்வமாக ஆர்.எஸ்.எஸ். எதிர்த்ததாகவும், சட்டத்திற்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவிக்க தலைநகரில் அம்பேத்கர் மற்றும் நேருவின் உருவபொம்மையை எரித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆதாரத்துடன் பதிலடி.
– குடந்தை கருணா