சென்னை, ஜூலை 4- வட சென்னை மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் 30.6.2024 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அன்னை நாகம்மையார் அரங் கத்தில் நடைபெற்றது.
‘நீட்’ எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்திற்கு வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்தார். தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி கடவுள் மறுப்புக் கூறினார்.
இக்கூட்டத்தில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டிணன், அயன் புரம் கழக தலைவர் சு.துரைராசு, கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் க.துரை, பூம்புகார் நகர் ச.இராசேந்திரன் ஆகியோர் வாகனப் பரப்புரைப் பயணம் குறித்துக் கூறினர்.
கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் வடசென்னை மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெறுவதற்கு ஆலோசனை கூறினார்.
11.7.2024 அன்று சென்னை பெரியார் திடலில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வழியனுப்பி வைக்கும் நீட் எதிர்ப்பு 5ஆம் அணி இரு சக்கர வாகன பிரச்சாரப் பரப்புரைப் பயணத்தில் 5 மோட்டார் சைக்கிளில் இளை ஞர்கள் பங்கேற்பது என முடி வெடுக்கப்பட்டது.
புரசை தாணா தெருவில் தொடங்கி அமைந்தகரை, மூலக்கடை, மாதவரம் ஆகிய இடங்களில் பயணக் குழு வினருக்கு வரவேற்பளித்து – நீட் எதிர்ப்புப் பரப்புரையை சிறப்பாக செய்வதெனவும், சேலத்தில் 15.7.2024 அன்று நடைபெறும் பயண நிறைவு பொதுக்கூட்டத்தில் பெருவாரியான தோழர்கள் பங்கேற்பதென்றும் முடிவெடுக் கப்பட்டது.
நிறைவாக வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன் நன்றி கூறினார்.
தமிழர் தலைவரிடம்
விடுதலை சந்தா
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் நிறைவு பெற்ற பிறகு, அனைத்துத் தோழர்களுடன் – மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் விடுதலை சந்தா நன்கொடை ரூ.50,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
தமிழர் தலைவருக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் பயனாடை அணிவித்தார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பா.இராமு, க.கலைமணி மற்றும் கழகத் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.