தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நாதஸ்வரம் படிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக. 23 இசைக் கல்லூரியில் நாதஸ்வரம், தவில் பிரிவுகளில் இளங் கலை பட்டப்படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மற்றும் திருவையாறில் செயல்படும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் பிரிவுகளில் பட்டயப்படிப்பு தொடங்கப் பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சென்னை, கோவை, மதுரை, மற்றும் திருவையாறில் இசைக்கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு இசை மற்றும் நாட்டிய பிரிவுகளில் மூன்றாண்டு பட்டயப்படிப்புகள் மற்றும் பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. குரலிசை, வயலின், வீணை மற்றும் பரத நாட்டியம் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புகள் உள்ளன. 

இந்நிலையில், சென்னை மற்றும் திருவையாறு இசைக் கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் பிரிவுகளில் இளங்கலைப் பட்டப்படிப்புக்கு சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இப்பிரிவுகளில் சேர விரும்புவோர் கலை பண்பாட் டுத்துறையின் இணையதளத்தின் மூலம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  www.artandculture.tn.gov.in என்ற இணைய தளத்தில் 31.08.2023 மாலை வரை விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப் பிக்க விரும்புவோர் முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, இராஜ அண்ணா மலைபுரம், சென்னை – 600028. தொலை பேசி எண் 044-24937217 அல்லது முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு – தஞ்சாவூர் மாவட்டம் – 613204, தொலைபேசி எண் 04362-261600 அணுகலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *