‘சென்னை’ என்ற சொல் ஆளுநர் வாயில் நுழையாதா? ‘மெட்ராஸ் தினம்’ என்று கூறுவதா ? தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்

1 Min Read

சென்னை, ஆக.23 சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ‘மெட்ராஸ் தினம்’ எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று 384-ஆவது’சென்னை தினம்’ கொண்டாடப்பட்டது.  இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மெட்ராஸ்’ தின வாழ்த்து எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி தமிழிலும், ஆங்கிலத் திலும் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “மெட்ராஸ் தினத்தில் அனை வருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறி வார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெ டுத்து கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்ட பிறகு, தமிழில் ‘சென்னை தினம்’ என்றே கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மெட்ராஸ் எனப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது பொது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொது நிகழ்ச்சிகளில் ஆளுநர் ரவி தமிழில் பேசி வருகிறார். பல மாதங்களாக தமிழ் கற்றுக்கொண்டு வரும் ஆளுநர் ரவி, தற்போது ஓரளவுக்கு தமிழை நன்றாகவே பேசி வருகிறார். அப்படி இருக்கும்போது,   ஆளுநர் வெளியிட்டுள்ள பதிவில் ‘மெட்ராஸ்’ தினம் எனக் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *