தேசிய கல்விக் கொள்கையை தூக்கி எறிகிறது கருநாடகா

2 Min Read

பெங்களூரு,  ஆக.23  கருநாட காவில் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், “கருநாடகா வில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில், தேசியக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. எனினும், பாஜக ஆளும் பல மாநிலங்கள்கூட இதில் ஆர்வம் காட்டவில்லை; இந்த கல்விக் கொள்கையை ஏற்கவில்லை.

தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கெனவே நிரா கரித்துவிட்டன. நாங்களும் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். ஏனெ னில், கருநாடகாவில் ஏராளமான உயர் கல்வி நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. கருநாடகா அறிவு சார் மய்யமாக உள்ளது. நாங்கள் ஏற்கெனவே அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி கருநாடக மாநில மாணவர்களின் நலன் கருதி தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். இது தொடர்பாக ஆய்வு மேற் கொள்ள இன்னும் ஒரு வாரத்தில் ஒரு குழு அமைக்க அரசு முடிவு செய்துள் ளது. இந்தக் குழு முழு மையாக ஆய்வு செய்து கருநாட காவுக்கு ஏற்ப மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும்” என தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2021ஆ-ம் ஆண்டு பாஜக ஆட்சியின்போது, நாட்டிலேயே முதல் மாநிலமாக கருநாடகாவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் சித்த ராமையா 2023-_2024ஆ-ம் ஆண்டுக் கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, ‘கருநாடக மாநிலத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட‌ தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்’ என்று அறிவித்தார்.

“அதற்கு பதிலாக கருநாடக மாநில கல்விக் கொள்கை கொண்டுவரப்படும். இந்த புதிய கல்விக் கொள்கை கருநாடக மாநிலத்தின் வரலாறு, சமூக, பொருளாதார, கலாச்சார அம்சங் களை உள்ளடக்கியதாக இருக்கும். இதற்காக வல்லுநர் குழு உருவாக் கப் படும்” என்று அவர் அறிவித் திருந்தது நினைவுகூரத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *