சிம்லா, ஆக 23 இமாச்சலப் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலச்சரிவு கார ணமாக சம்மர்ஹில் பகுதியில் அமைந் திருந்த சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் உடல் நசுங்கி இறந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் போர்க் கால அடிப்படையில் நடைபெற்று வரு கின்றன. இதுவரை அங்கிருந்து 17 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள் ளனர். இதுகுறித்து இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர் பிர போகத் சக்சேனாநேற்று கூறும் போது, (21.8.2023) ‘‘இதுவரை 17 பேரின் உடல் களை மீட்டுள்ளோம். இன்னும் 2 பேரின் உடல்கள் உள்ளேயே சிக்கியுள் ளன. அதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகி றோம். மேலும் சிலரின் உடல்கள் உள் ளேயே சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கி றோம். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் அந்த உடல்களையும் மீட்டுவிடுவோம். இப்பகுதியில் நிலச் சரிவால் ஏற்பட்ட சேதத்தை சீர் செய்து வருகிறோம். சாலைகள் செப்ப னிடப்பட்டு வருகின்றன.
சிவனே என்று இருக்கும் சிவன் : சிம்லாவில் கனமழையால் சிவன் கோயில் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் மரணம்
Leave a Comment