ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங் களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. எம்.டி.எஸ்., 4,887, ஹவில்தார் 3,439 என மொத்தம் 8,326 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.8.2024 அடிப்படையில் எம்.டி.எஸ்., 18 – 25, ஹவல்தார் 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணைய வழியில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மொழி: தமிழ், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், புதுச்சேரி.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 31.7.2024
விவரங்களுக்கு: ssc.gov.in