சென்னை, ஜூலை 3– தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் இருக் கும் நிலையில் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தே மாண வர்களுக்கு நேரடி நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அதன்படி முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து நிதியுதவி நிவாரண பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் இளங் கலை படிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்க பணம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களின் பட்டப் படிப்புகளை தொடர்ந்து பயில் வதற்கு ஏதுவாகவும் அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2023-2024 ஆம் கல்வியாண்டில் 24 மாணாக்கர்களுக்கு நிதி உதவித் தொகையான ரூ.50,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்கு அனைத்து கல்விக் கட்டணத்தை 2007-2008ஆம் கல்வியாண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் அரசால் தள்ளுபடி செய்து அரசு கட்டணமில்லாக் கல்வியை வழங்குகிறது.
மேலும் 2010-2011ஆம் கல்வியாண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் பட்டப்படிப்புப் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் கல்விக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களின் பெற்றோரின் நிதிச்சுமை பெருமளவில் குறைந்துள்ளது, என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கூடுதல் திட்டங்கள்:
இது போக புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’ மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றுவதாக அறிவித்தார்.
அதன்படி அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யாருக்கு வழங்கப்படுகிறது?:
அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு பணம்:
இந்த நிலையில்தான் புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.
போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
“கலைஞர் கனவு இல்லம்” திட்டத்திற்கும், இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்:
அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மாணவர்கள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை.
நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ‘தமிழ் புதல்வன் திட்டம்’ என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் விரைவில் நடத்தப்பட உள்ளது.