புதுக்கோட்டை, ஜூலை 3- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் கலந்துறவாடல் கூட்டம் 29.6.2024 சனிக்கிழமை பகல் 11 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாநில மாண வர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் கருத்துரையாற்றினார்.
இந்நிகழ்வில் மேலும் மாவட்டச் செயலா ளர் ப.வீரப்பன், பொதுக் குழு உறுப்பினர் செ.இரா சேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் சு.கண்ணன், மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாணவர் கழகத்தைச் சேர்ந்த ம.அறிவுமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இராமநாத புரத்தில் இருந்து வரும் நீட் எதிர்ப்புப் பேரணி திருமயம், புதுக் கோட்டையில் வரவேற்று சிறப்பாக இரண்டு இடங்களிலும் நடத்துவது, குற்றாலத்தில் நடைபெறும் பயிற்சிமுகாமில் மாணவர்களையும் இளை ஞர்களையும் அனுப்பி வைப்பது, நீட் எதிர்ப்புத் துண்டறிக்கையை கல்லூரி பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது, எதிர் வரும் ஜூலை 6 அன்று கந்தர்வக்கோட்டையில் நடைபெறும் தெருமுனைக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என நான்கு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத் துணைச் செயலாளர் சு.கண்ணன் இதுவரை 170முறை குருதிக்கொடை வழங்கியமைக்காக திரா விடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து பாராட்டப்பட்டார்.