தரமற்றவை சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகள் தரமற்று இருந்தது எனப் புகார் தந்ததின் அடிப் படையில் கடந்த மே மாதத்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், சளி, ஜூரண மண்டல பாதிப்பு, கிருமித் தொற்று, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 526 மருந்துகள் தரமற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது என ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணைய தளத்தில் (cdsco.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.