கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 2.7.2024

viduthalai
2 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*அடுக்கடுக்காக பிரச்சினைகளை எழுப்பி மக்கள வையில் பாஜகவை திணறடித்த ராகுல்: 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது.

* பாஜக ஒரு ஹிந்து விரோத கட்சி; வன்முறையைப் பரப்புகிறது, ராகுல் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* குற்றவியல் திருத்த சட்டங்களை நிறுத்தி வையுங்கள் – வில்சன் எம்.பி. பேச்சு.

* இந்தியாவில் மத வெறுப்பு, வன்முறை அதிகரித்துள்ளது என்ற அமெரிக்காவின் அறிக்கைக்கு மறுப்பு தெரி விக்கும் இந்திய அரசு, உரிய தரவுகளை ஏன் தர மறுக்கிறது என்கிறார் எழுத்தாளர் ஆகார் படேல்.

* மாநிலங்களவையில் மல்லிகார்ஜூனா கார்கேவின் மோடி மீதான குற்றச்சாட்டின் பேச்சின் பல பகுதிகளை அவைத் தலைவர் நீக்கினார்.

* நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: கடந்த தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற 6 பேர் உட்பட யாருமே மறு தேர்வில் .முழு மதிப்பெண் பெறவில்லை

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மதத்தையும் அரசியலையும் கலக்கும் பாஜகவின் தந்திரங்களை மதவாதிகளும் புறந்தள்ளிவிட்டனர் – திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா

* நீதிபதிகள் பதவி உயர்வுக்கு பலரிடம் சிபாரிசுக்கு நிற்கின்றனர், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு.

* கார்கேவின் ஆர்எஸ்எஸ் கருத்து. மாநிலங்களவையில் சலசலப்பு. ‘ஒரு அமைப்பில் அங்கமாக இருப்பது குற்றமா’ என்கிறார் அவைத் தலைவர் தன்கர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதைக் கண்டித்து, ஒரு எம்.பி.யின் குரல்வளையை நெறிக்கப் பார்த்தீர்கள். அதற்கு பாஜக பெரும் விலை கொடுத்தது, 63 இடங்களை இழந்தது. அது ஒரு “முடியாட்சியின் சின்னம்” என மீண்டும் எம்.பி. ஆன மஹுவா மொய்த்ரா அதிரடி பேச்சு.

தி இந்து:

* கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டுமா? நியாயமான காரணங்களை விளக்கு கிறார் கட்டுரையாளர் ரங்கராஜன், அய்.ஏ.எஸ்.

*எந்த உயர் கல்வி சேர்க்கைக்கும் நுழைவுத்தேர்வு கூடாது 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம்: மாநில கல்வி கொள்கை இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி முருகேசன் குழு அளித்தது.

தி டெலிகிராப்:

* புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியாவை “போலீஸ் ராஜ்ஜிய”த்திற்கு இட்டுச் செல்லும் என்கிறார் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்.

* டில்லி பார் கவுன்சில், ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த மூன்று புதிய குற்றச் சட்டங்களை அமல்படுத்து வதற்கு அரசமைப்புச் சட்டம் அல்லது சட்டமன்ற தகுதி அரசாங்கத்திற்கு இல்லை என்ற அடிப்படையில் அவற்றை ஒத்திவைக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை.

* எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் பேச்சு: சங்பரிவார் ஹிந்து மதத்தை சிதைக்கிறது; நீட் தேர்வு பணக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது; அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல், மணிப்பூர் கலவரம் மற்றும் விவசாயிகள் போராட்டங்களை அரசு கையாண்ட விதம் என அடுக்கடுக்காக பிரச்சினைகளை எழுப்பி மக்களவையில் பாஜகவை திணறடித்த ராகுல்: 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *