சென்னை, ஜூலை 2- சென்னை பெரம் பூர் அய்.சி.எப். தொழிற்சாலை யில், இந்திய ரயில்வே துறைக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கும் பெட்டிகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மின்சார ரயில் பெட்டி கள், விரைவு ரயில் பெட்டிகள், விரைவு ரயில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், சுற்றுலாவுக்கான ரயில் பெட்டிகள் மற்றும் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அய்.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியன் ரயில்வே துறையின், அய்.சி.எப். தொழிற்சாலை 1955ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. அய்.சி.எப். தொழிற்சாலை ஒவ்வொரு ஆண்டும் அதன் தயாரிப்பின் தரத்தை மேம்படுத்தி வருகிறது.
அய்.சி.எப். தொழிற் சாலையில் 1957-1958ஆம் காலக்கட்டத்தில், ஆண் டுக்கு 74 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
ஆனால், தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வந்தே பாரத் ரயில், டெமு ரயில், அதிவேக விபத்து மீட்பு ரயில், சொகுசு ரயிலான மகாராஜா விரைவு ரயில் என பல்வேறு வடிவமைப் பிலான ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அய்.சி.எப். இந்திய ரயில்வே துறைக்கான 75 ஆயிரமாவது ரயில் பெட்டி தயாரித்து சாதனைப் படைத்து உள்ளது.
நிறுவனம் தொடங்கிய 68 ஆண்டுகளில், 75 ஆயிரம் ரயில் பெட்டிகள் என்பது பெருமைமிகு சாதனை என்று இந் திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதில், 875 வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளும் அடங்கும். அய்.சி.எப். உருவாக்கிய 75 ஆயிரமாவது ரயில் பெட்டியை அய்.சி.எப். பொதுமேலாளர் சுப்பராவ், 30.6.2024 அன்று பார்வையிட்டு, ரயில் பெட்டியை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்த 75 ஆயிரமாவது ரயில் பெட்டி, 69-வது வந்தே பாரத் ரயிலுக்காக வடி வமைக்கப்பட்டு உள்ளது.
இதுவரை, அய்.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 75 ஆயிரம் பெட்டிகளில் 752 வந்தே பாரத் ரயில் பெட்டி, 12 வந்தே மெட்ரோ ரயில் பெட்டி, 6 ஆயிரத்து 895 எல்.எச்.பி. குளிர்சாதன பெட்டிகளும், 8 ஆயிரத்து 152 சாதாரண எல்.எச்.பி. பெட்டிகளும் அடங்கும்.
மேலும், அய்.சி.எப். தொழிற்சாலை தொடங்கியது முதல் 1955-2015ஆம் ஆண்டு வரையில் 49 ஆயிரத்து 588 பெட்டிகள் தயாரிக்கப் பட்டு உள்ளது.
கடந்த 2015 ஆண்டு முதல் தற்போது வரையில் 25 ஆயிரத்து 412 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.