சென்னை,ஆக.24- சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட சாதனையையடுத்து, அதன் திட்ட இயக்குநர் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த முதலமைச்சர் அவர்களின் உரையாடல் வருமாறு:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : வாழ்த்துகள்.. வாழ்த்துகள்.. சந்திரயான் விண்கலம் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே உலக அளவில் பெருமை தேடிக்கொடுத்திருக்கிறீர்கள்.
திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் : ரொம்ப மகிழ்ச்சி சார்.. ரொம்ப சந்தோஷம்
முதலமைச்சர் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உங்கள் அப்பாவின் பேட்டியை பார்த்தேன். அவர் ரொம்பவும் பெருமைப்பட்டுள்ளார். நீங்கள் தமிழ்நாட்டுக்கு வரும் போது எனக்கு தகவல் மட்டும் சொல்லுங்கள். நான் உங்களைச் சந்திக்கிறேன்.
வீரமுத்துவேல் : எஸ் சார். ரொம்ப சந்தோஷம் சார்.
முதலமைச்சர் : கட்டாயம் சந்திக்கிறேன். வாழ்த்துகள். எல்லோருக்கும் வாழ்த்துகளை சொல்லுங்க..
வீரமுத்துவேல் : ரொம்ப மகிழ்ச்சி சார். வாழ்த்துகளை எல்லோருக்கும் சொல்கிறேன் சார். நீங்க கால் பண்ணினதுக்கு ரொம்ப சந்தோஷம் சார். உங்களோட சர்வீஸ் எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார். ரொம்ப சந்தோஷம் சார்.
முதலமைச்சர் : ரைட்… ரைட்….
வீரமுத்துவேல் : ரொம்ப மகிழ்ச்சி சார். நீங்கள் எனக்கு போன் பண்ணினதே ரொம்ப சந்தோஷம் சார்.
முதலமைச்சர் : பெரிய சாதனை… பெரிய சாதனை…
வீரமுத்துவேல் : சார் இப்ப ரோவர் வந்து வெளியில இருக்கு. சந்திரயானோட ரோவர். அதனால நான் எதுவும் பேச முடியவில்லை. ஏன்னா லாஸ்ட் பியூ மினிட்ஸா நான் ஆபரேஷன்ஸ்ல இருந்ததால எனக்கு முக்கியமான வேலை இருந்துச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷம் சார், உங்கள் கிட்டே பேசினதுக்கு.
முதலமைச்சர் : நல்லது.. நல்லது..
வீரமுத்துவேல் : தேங்க் யூ சோ மச் சார். தேங்க் யூ சோ மச்..
முதலமைச்சர் : தமிழ்நாட்டுக்கு வரும்போது சொல்லுங்க.. உங்கள நான் மீட் பண்ணுகிறேன்.
வீரமுத்துவேல் : ரொம்ப சந்தோஷம் சார்
முதலமைச்சர் : வணக்கம்.