டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு உயர்த்துவதற்கு புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் இயற்ற காங்கிரஸ் வலியுறுத்தல்.
* எதிர்க்கட்சி தலைவராக எதற்கும் துணிந்த ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆளும் மோடி அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.
*பாஜகவுக்கு பாடம் புகட்ட ‘இந்தியா’ கூட்டணி புது வியூகம்; துணை சபாநாயகர் வேட்பாளர் அவதேஷ் பிரசாத்?: கூட்டத் தொடர் முடிய 3 நாட்களே உள்ளதால் பரபரப்பு.
* கோவிட் காரணத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை குறிப்பெடுக்கும் பத்திரிக்கையாளர்கள் குறைக்கப்பட்ட எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்.
தி டெலிகிராப்:
*மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பலவற்றைப் பேசிய பிரதமர் மோடி, எரிந்து கொண்டிருக்கும் நீட் தேர்வு மோசடி குறித்து வாய் திறக்கவில்லை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராஷ்டிரா தேர்தலில் தங்கள் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் தேசிய காங்கிரஸ் (சரத்பவார்) இணைந்து போட்டியிடும்: சரத் பவார் அறிவிப்பு.
– குடந்தை கருணா