‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் வாகன பரப்புரைப் பயணம்! சிறப்பான வரவேற்பளிக்க பெரம்பலூர் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு

2 Min Read

பெரம்பலூர், ஜூலை 1- பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பெரம்பலூர் – மருத்துவர் குண கோமதி இல்லத்தில் 30. 6.2024 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை யேற்று நாடாளுமன்றத் தேர்த லுக்குப் பிறகு நாட்டின் சூழ்நிலை குறித்தும், திராவிடர் கழகம் ஆரம்பம் முதல் “நீட்”டை எதிர்த்து குரல் கொடுத்து வருவதையும் இன்று இந்திய துணைக் கண்டம் முழுவதும் நீட் எதிர்ப்பு பற்றி எரிவதையும், அதை மேலும் கூர்மைப்படுத்தும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ள இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை எழுச்சியுடன் நடத்த வேண்டியதன் அவசி யம் குறித்தும் விளக்கி உரை யாற்றினார்.

மாவட்டத் தலைவர் சி.தங்கராசு சுற்றுப்பயண விவரங்களையும், செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மு.விஜ யேந்திரன், நகரத் தலைவர் அக்ரி ந. ஆறுமுகம்,பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராஜன், பெரியார் பெருந்தொண்டர், செ.அரங்கையா, பெரம்பலூர் சி.பிச்சைப்பிள்ளை, பி.தமிழ்மாறன், ஒன்றிய செய லாளர் இரா.சின்னசாமி சு.ராமு, மாவட்ட அமைப்பாளர் பெ.துரைசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.சரவணன், பெரியார் பெருந்தொண்டர் ஆ.துரைசாமி, ஆகியோர் பங்கேற்று கருத்து களை எடுத்துக் கூறினர். முன்னதாக பெரம்பலூர் துறை மங்கலத்தில் கழகக்கொடி ஏற்றப்பட்டது.

கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
தீர்மானம் எண் 1: ஒன்றிய பாஜக அரசு சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிராக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களை பெரி தும் பாதிக்கும் நீட் தேர்வை திணித்து வஞ்சித்து வருகிறது. நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை விழிப்பு ணர்வு பயணங்களை நடத்தி மக்கள் மத்தியில் போர்க் குரல் எழுப்புவது திராவிடர் கழகம். இன்று இந்திய துணைக்கண்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது அதை மேலும் கூர்மைப்படுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழ்நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற உள்ளது. நமது பெரம்பலூர் மாவட்டத்திற்கு 15. 7. 2024 அன்று வருகை தரும் பரப்புரை குழுவை குன்னத்தில் வரவேற்பதெனவும் அன்று மாலை சேலத்தில் நடைபெறும் தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்கும் நிறைவு விழாவில் பெருந்திரளாக சென்று பங்கேற்ப தென ஒரு மனதாக முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 2: நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜகவுக்கு எதிராக 40க்கு 40 வெற்றியினை “இந்தியா” கூட்ட ணிக்கு அளித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாக்காளர் பெருமக்களுக்கு இந்தக் கலந்துரையாடல் கூட்டம் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 3: கல்வி நிறு வனங்களில் மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வும், அதன் மூலம் ஏற்படும் கலவ ரங்களையும் தடுப்பதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி (ஓய்வு) திரு. கே.சந்துரு அவர்கள் அளித்துள்ள பரிந்துரைகளை இந்தக் கலந்துரையாடல் கூட்டம் வரவேற்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கோரிக்கையினை ஏற்று ‘திராவிட மாடல்’ அர சின் முதலமைச்சர் அந்தப் பரிந்துரைகளை உடனே செயல்படுத்திட வேண்டும் என்று இந்தக் கலந்துரையாடல் கூட்டம் கேட்டுக் கொள்கிறது என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *