ஒசூர், ஜூலை 1- ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 30.6.2024 அன்று மாலை 4 மணிக்கு முனிஸ்வர் நகர் பெரியார் தோட்டத்தில் நடைபெற்றது.இளைஞரணி மாவட்ட தலைவர் பி.டார்வின் பேரறிவு அனைவரையும் வர வேற்றார்.மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தருமபுரி மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர் நோக்கவு ரையாற்றினார்.
ஜுலை 11 சென்னையில் இருந்து வருகை தரும் நீட் ஒழிப்பு பிரச்சார பயணக் குழுவினரை தமிழ்நாடு நுழைவாயில்(அத்தி பள்ளி ஆர்ச்)பகுதியில் வரவேற்று ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகிலும், மாவட்ட எல்லையான இராக் கோட்டை பேருந்து நிலையத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டு பாலகோடு வழியாக சேலம் (14,15 ஆம் தேதிகளில்) வரை சென்று சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பது இந்த பயணத்தில் மாவட்ட இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் 20 நபர்கள் பங்கேற்பது, நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சியினரையும் பங்கேற்க செய்வது என தீர்மா னிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் செ.பேரரசன், மாவட்ட இளை ஞரணி தலைவர் பி.டார்வின் பேரறிவு, மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் க.கா.சித்தாந்தன், ஒன்றிய அமைப்பாளர் து.ரமேஷ், மருத்துவரணி மருத்துவர் திலீபன்,மாணவர் கழக எஸ்.கே.தருண், ஆனந்த், மேனாள் சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் க.கா.வெற்றி ஆகியோர் கலந்துகொண்டனர்.
‘நீட்’ ஒழிப்பு பிரச்சார பயணக் குழுவினரை வரவேற்று இளைஞரணி, மாணவர் கழகத்தினர் பங்கேற்பதென ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் முடிவு
Leave a Comment