தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.7.2024) தலைமைச் செயலகத்தில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த 5 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கோள்வதற்காக சிறப்பு ஊக்கத்தொகையாக தலா 7 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் தேர்வு
Leave a Comment