சென்னை, ஜூன் 30- தமிழ்நாட்டில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடுகள் இல்லாதவையாக இருப்பதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய முறையை கையாள உள்ளது.
அதன்படி கூடுதல் மின்னணு கண்காணிப்பு வழி முறைகளை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்பாளர்களை வீடியோ படம் எடுத்தல், ரகசிய ஆவணங்களை கொண்டு செல்லும் வாகனங்களை ரிமோட் மூலம் லாக் செய்தல், தனிப்பயனாக்கப்பட்ட OMR தாள்கள், வாகனங்களின் ஜிபிஎஸ் கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி கேள்வி மற் றும் பதில் தாள்களை ஏற் றிச் செல்லும் பட்டய வாக னங்களின் இயக்கத்தைக் கண்காணிக்க, வாகனங்களைப் பூட்டுவதற்கும் திறப்பதற்கும் ஜி.பி.எஸ் டிராக்கர்கள் மற்றும் ஜி.பி.எஸ் பூட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பொருள் கேள்வி தாள்கள் அல்லது பதில் தாள்களைக் கொண்டு செல்லும் போது சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் அல்லது நிறுத்தம் ஏற்பட்டால், ஜி.பி.எஸ். டிஎன்பிஎஸ்சி தலைமையகத்தில் உள்ள கட்டளை அறையிலிருந்து லாக்-இன் சிஸ்டத்தை ரிமோட் மூலம் இயக்கலாம்.
இதன் மூலம் டிஎன்பி எஸ்சியின் அதிகாரப்பூர்வ ரகசியப் பொருட்களான கேள்வித்தாள், விடைத்தாள் களை மற்றவர்கள் அணுகுவ தைத் தடுக்க முடியும்.
எப்படி செயல்படும்: ஜிபிஎஸ் பூட்டுகளை இயக்குவதற்கான ரிமோட் கட்டளை ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்புக் குழுவால் கையாளப்படுகிறது. மாவட்டங்களில் இருந்து டிஎன்பிஎஸ்சிக்கு ரகசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. வருவாய்த்துறை ஊழியர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆணைய ஊழியர்கள் அடங்கிய குழுவால் வாக னங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, டிஎன்பிஎஸ்சி தனிப்பயனாக்கப்பட்ட ஓம்எம்ஆர் தாள்களை அறிமுகப்படுத்தி உள்ளது, அதில் வேட்பாளர் பெயர்கள் மற்றும் பதிவு எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய முறை, விடைத்தாள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கிறது. விடைத்தாள்களை மதிப்பீட்டிற்காக ஸ்கேன் செய்யும் போது, விண்ணப்பதாரர்களின் ரோல் எண்ணுடன் மதிப்பெண்கள் தானாகவே பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்
தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் நிரப்பப்படும் அரசு வேலைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அதன்படி தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உட்பட பல்வேறு தேர்வுகள் மூலம் 70 ஆயிரம் கூடுதல் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது போக மற்ற தேர்வுகள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளன. 2026 ஜனவரிக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன.
குரூப் தேர்வு மட்டுமின்றி பல தேர்வுகள் மூலம் நிறைய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குரூப் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் நடக்கும் குரூப் தேர்வுகள் மூலம் மேற்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
இந்த தேர்வுக்கு ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ஆம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.
மற்ற தேர்வுகள்:
கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மய்யங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது.