சென்னை, ஜூன் 30- நியாய விலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத முதி யோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அங்கீகரிக்கப் பட்ட பிரதிநிதிகள் மூலம், இன்றி யமையாப் பொருட்களை பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம், 3,15,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப் பட்டு 2,76,733 குடும்ப அட்டைதாரர்கள், பிரதிநிதிகள் மூலமாக பொருள்களை பெறுகின்றனர் என அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திமுக அரசு ஆட்சி பொறுப் பேற்றது முதல் தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 குடும்ப அட்டைகள் வழங் கப்பட்டுள்ளன. பெறப்பட்ட 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண் ணப்பங்களில் 9 ஆயிரத்து 784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் சரி பார்க்கப்பட்டு குடும்ப அட் டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.
திறன் குடும்ப கார்டுகளை பெறுவதில் தாமதம் ஏற்படு வதாக எழுந்த புகார்கள் குறித்து அமைச்சர் கூறியதாவது; சில மாதங்களுக்கு முன்பு வீடு தேடி விநியோகம் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 4.55 லட்சம் அட்டைகள் விரைவு அஞ்சல் மூலம் விநியோ கம் செய்யப்பட்டுள்ளன. “சுமார் 9,500 புதிய அட்டைகள் அங்கீகரிக்கப்பட்டு இப்போது விநியோகத்திற்கு தயாராக உள்ளன,” என்று கூறினார்.