இலால்குடி. ஜூன் 30- இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் உடுக்கடி அட்டலிங்கம் (வயது 93) 17-6-2024 அன்று இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 22-6-2024 அன்று மாலை மறைவுற்றார்.
அவரது சொந்த ஊரான அழகியமணவாளம் கிராமத்தில் 23-6-2024 அன்று மாலை இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.அன்னாரது உடல் மீது கழகக் கொடி மற்றும் கறுப்பு துண்டு போர்த்தப்பட்டது. இலால்குடி, திருச்சி, துறை யூர் மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதிய சங்கத்தினர், அனைத்து கட்சித் தோழர்கள் ஊர் பொதுமக்கள் உறவினர்கள் நண்பர்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்
இலால்குடி மாவட்ட கழகத் தலைவர் வால்டர் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் பா.ஆல்பர்ட், காப்பாளர் அரங்கநாயகி, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், திருச்சி மோகன்தாஸ், இலால்குடி மாவட்ட செயலாளர் ஆ.அங்க முத்து மற்றும் பலரும் அட்டலிங்கம் அவர்கள் கட்சிக்கு ஆற்றிய பணியையும் தொண்டையும், உடுக்கடித்து கழக கொள்கைகளை தமிழ்நாடு முழுவதும் பரப்பியதையும் நினைவு கூர்ந்தனர் . மூத்த மகன் தமிழரசு நன்றி கூறி னார். உடற்கொடை செய்ய அட்டலிங்கம் விருப்பம் தெரிவித்து இருந்த போதிலும் மருத்துவமனையில் உடற் கூராய்வு செய்யப்பட்டதால் உடற்கொடை அளிக்க இயல வில்லை. இறுதியில் அனைவரும் வீர வணக்க முழக்கம் எழுப்பி இரு நிமிடங்கள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர் அதன்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆசிரியர் இரங்கல் அறிக்கை நகல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
அன்னாரது படத்திறப்பு நிகழ்வு எதிர்வரும் 4-7-2024 அன்று காலை 11 மணியளவில் மண்ணச்சநல்லூர் துறையூர் சாலையில் தாலுகா அலுவலகம் எதிரில் அமைந்துள்ள ஆர். ஜே. திருமண மண்டபத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.