நாகர்கோயில், ஜூன் 30- கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பெரியாரியல் கருத்துக்களை பரப்பும் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூரில் எம்.இ.டி. பொறியியல் கல்லூரியில் நடை பெற்றது.
பெரியார் பெற்றுக்கொடுத்த பெண்ணுரிமை, பெண்களுக்கான சொத்துரிமைகள், பெரியாரின் தொலைநோக்குப் பார்வை, பெரியார் பரப்பிய அறிவியல் சிந்தனைகள், அறிவியல் கருத்துக்கள், பெரியாருடைய அணுகுமுறைகள் குறித்து உரையாற்றினார்கள். கல்லூரி செயல் அதிகாரி கோ.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச் சியில் திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு ஆகியோர் பங்கேற்று உரையாற்றி சிறப்பித்தனர்.
காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கலை இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் பா.பொன்னுராசன் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர்எழில் தினேகா கல்வியியல் கல்லூரி முதல்வர் சிறீலதா ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். அதிகமான மாணவ,மாணவியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பங் கேற்றவர்கள் சுயமரியாதை இயக்க வரலாறு குறித்தும், பெரியாருடைய தொண்டுகள் மற்றும் வரலாறு குறித்தும் நிறைய செய்திகளை அறிந்துகொண்டனர்.