30.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< நாடாளுமன்றத்தில் நீட் எதிர்ப்பை அடுத்து அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா கூட்டணி முடிவு.
< டில்லியை தொடர்ந்து குஜராத்தில் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து!
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< பீகார் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி நிலை அல்லது நிதி கோருகிறது என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம்.
< மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ஒழித்தால், தெலங்கானா மாநில மாணவர்களுக்கு 900 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என சட்ட நிபுணர்கள் கருத்து.
< தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப் பேரவையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்ற முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< பிரிவினைவாத, வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தேர்தல் முடிவால் தெரிகிறது. ஆனால் எதுவுமே நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார் என சோனியா காந்தி தாக்கு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< நீட் தேர்வுத் தாள் கசிவு விசாரணை: ஜார்கண்டில் இருந்து பத்திரிகையாளரை கைது செய்த சிபிஅய், குஜராத்தில் 4 மாவட்டங்களில் 7 இடங்களில் சோதனை
தி இந்து:
< ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு பாஜக அழிந்துவிடும் என பிணையில் வெளிவந்துள்ள ஜார்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உறுதி.
– குடந்தை கருணா