ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை, ஜூன் 30 – 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் அவர்கள் கைது செய்யப்பட்டது என்பது எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்காக பாஜக அரசு அரங்கேற்றிய அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர் ஒருவரின் முதலமைச்சர் பதவியைப் பறித்தனர், அவரை அய்ந்து மாதங்கள் சிறையில் அடைத்து வதைத்தனர், தேர்தல் பரப்புரை மேற்கொள்ள விடாமல் தடுத்தனர்.

இந்நிலையில், அவருக்குப் பிணை வழங்கியுள்ள நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். ஹேமந்த் சோரன் அவர்களின் மன உறுதியையும், ஜார்க்கண்ட் மக்கள் மீது அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஓவைசியின் வீட்டை
தாக்கிய ஹிந்துத்துவவாதி

புதுடில்லி, ஜூன் 30 – அசாதுதீன் ஓவைசியின் இல்லத்தை தாக்கி கைதான ஹிந்துத்துவ பயங்கரவாதி மோடி மற்றும் அமித்ஷாவோடு இருக்கும் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அய்தராபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கும் போது ‘ஜெய் ஹிந்த்’, ‘ஜெய் பாலஸ்தீன்’ என்று முழக்கம் எழுப்பினர்.

அவர் எழுப்பிய முழக்கம் சட்டவிரோதமல்ல என்று வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹிந்துத்துவ அமைப்பினர் அவருக்கு எதிரான போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ஹிந்து என்ற அமைப்பின் தலைவர் என்று கூறிகொள்ளும் வினோத் சர்மா என்பவர் அசாதுதீன் ஓவைசியின் டில்லி இல்லத்தை தாக்கிய குற்றச்சாட்டில் கைதானார். அவர் வீட்டை தாக்குவதற்கு முன்பு அவரது வீட்டின் முன்பு நின்று பேசிப் படம் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கே பாதுகாப்பு இல்லையா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது தாக்கப்பட்ட நபருக்கும் பாஜவிற்கும் தொடர்பில்லை என்று பாஜக சார்பில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

ஆனால் அவர் சமீபத்தில் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் அவர்களது இல்லத்திற்கே சென்று சந்தித்த படங்கள் வெளியாகி உள்ளன.
பிரதமரையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவர்களது இல்லத்திற்கே சென்று சந்திக்கும் அளவிற்கு மிகவும் நெருக்கமான நபரை பாஜக எங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று கூறியிருந்த நிலையில் இப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *