நமது வள்ளல் திருச்சி ‘வீகேயென்’ கண்ணப்பன் அவர்களின் நேர்மை மிக்க ஊழியரும் – உதவியாளரும், நம்மிடம் மாறாத அன்பும், மரியாதையும் கொண்ட, தி.மு.க.வின் சிறந்த தொண்டரும், தொழிலாளர்களின் தோழரும், மின்வாரிய பணி ஓய்வு பெற்ற நமது அருமை சகோதரருமாகிய ‘வீகேயென்’ என்ற அடைமொழியோடு விசுவாசமாக பணியாற்றிய ‘வீகேயென்’ ஆ.பாண்டியன் (25.8.2023) அவர்கள் மறைவு கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தோம். சீரிய கொள்கையாளர்!
அவரது மறைவு அவரது குடும்பத்தவர்களுக்கு மட்டுமல்ல; ‘வீகேயென்’ தொழில் குடும்பத்திற்கும், திராவிடர் இயக்கத்திற்கும் தனிப்பட்ட முறையில் நமக்கும் பேரிழப்பாகும்!
அவரை இழந்து வாடும் அத்துணைப் பேருக்கும் நமது ஆழ்ந்த ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.8.2023