சென்னை, ஜூன்28- தமிழ்நாட்டின் புயல் நிவாரணத்திற்கு ரூ.38 ஆயிரம் கோடி கேட்டதற்கு, ஒன்றிய அரசு வெறும் ரூ.276 கோடி தான் தந்தது. இது பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்த கதையாக ஒன்றிய அரசு செயல்படுகிறது என்று சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
டில்லியில் ஒன்றிய நிதித் துறை அமைச்சர் கூட்டியிருந்த மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினேன்.
ஆனாலும் சென்னை மெட்ரோரெயில் 2ஆம் கட்டத் திட்டத்திற்கான முழுச் செல வினத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசிற்கு மிக கடுமையான நிதிச் சுமை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றிற்கு நிவாரண மாக ரூ.37 ஆயிரத்து 906 கோடியை கேட் டோம். ஒன்றிய அரசு கொடுத்த தொகை ரூ.276 கோடிதான் பனை ஏறி விழுந்தவனை கடா ஏறி மிதித்த கதையாக, இப்படி, நடந்துகொண்டது எந்தவகையில் நியாயம்? இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதி. எனவே அந்த பேரிடர் நிவாரண நிதிக்கு மிகக்கூடுதலான நிவா ரண நிதியை ஒன்றிய அரசு தர வேண்டும்.
ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஒன்றிய அரசு நிறுத்திய தன் காரணமாகரூ.20 ஆயிரம் கோடி வர வேண்டியிருக்கிறது, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப் பான்மையோடுநடத்து வருவதுபற்றி டில்லி கூட்டத்தில் பேசினேன். இவ்வாறு அவர் கூறினார்.