சென்னை, ஜூன்28– கடந்த ஆண்டு பதிவுத் துறை வருவாய் முந்தைய ஆண்டைவிட 8.84 சத வீதம் அதிகமாக அதாவது ரூ.18,825.32 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சார்பதிவாளர் அலு வலகங்களில் விற்பனை, பரிவர்த்தனை, கொடை, அடமானம் மற்றும் குத்தகை ஆவணங்களை பதிவு செய்வதற்காக முத் திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றுடன் ஆவணத்தில் பிரதிபலிக்கும் மதிப்பு களின் அடிப்படையில் குறிப்பிட்ட விகிதத்தில் மாற்று வரியும் வசூலிக் கப்படுகிறது.
மேலும் இந்து திருமணங்கள், சிறப்பு திருமணங்கள், சீட்டுக்கள் கூட்டாண்மை நிறுமங்கள் மற்றும்சங்கப்பதிவு, வில்லங்க சான்று, சான்றளிக்கப்பட்ட ஆவண நகல்கள், பிறப்பு, இறப்பு பதிவுகளின் அறிக்கை வழங்குவதன் மூலம் வருவாய் ஈட் டப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2023-2024ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 22,857 ஆகும். இதன் மூலம் ரூ.18,825.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.