சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அறிவிப்பு
சென்னை, ஜூன் 28- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் விண்ணப் பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சார்பில், சட்டப்பேரவையில், கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கென 2023-2024ஆம் நிதியாண்டில் 8 ஆயிரத்து 124 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், 2024-2025ஆம் நிதியாண்டிற் கென 13 ஆயிரத்து 722 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் மூலம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்கள் உட்பட ஒரு கோடியே 15 லட்சத்து 27 ஆயிரத்து 172 மகளிர் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் உரிமைத்தொகை கோரி மேல்முறையீடு செய்தவர்களில் ஒரு இலட்சத்து 48ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட மேல்முறையீடு விண்ணப்பதாரர்கள் விரும்பினால், நிராகரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் இ-சேவை மய்யம் வழியாக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் உரை
5 முக்கிய பிரச்சினைகள் இடம் பெறவில்லை
காங்கிரஸ் தலைவர் கார்கே எம்.பி. குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 28- குடியரசுத் தலைவர் உரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித் துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
மோடி அரசு எழுதிக் கொடுத்த குடியரசுத் தலைவர் உரையை பார்த்தால் பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது. நாடா ளுமன்ற தேர்தல் முடிவு அவருக்கு எதிரானது. ‘400 தொகுதிக ளுக்கு மேல் வெல்வோம்’ என்று அவர் கூறியும், மக்கள் பா. ஜனதாவுக்கு 272 தொகுதிகளை கூட அளிக்கவில்லை.
மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்கா தது போல் நடிக்கிறார். கைதட்டல் வாங்குவதற்காக குடியரசுத் தலைவரை பொய்களை படிக்க வைத்துள்ளார்.
விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, யில் விபத்துகள், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்கள், பா ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய 5 முக்கிய பிரச்சினைகள், குடியரசுத் தலைவர் உரையில் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை.
– இவ்வாறு அவர் கூறியுள்ளார்.