28.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாடு மத, ஜாதி வெறுப்புக்கு எதிராக போராடுவதற்கு தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்த நெறி முறையே காரணம் என உதயநிதி சட்டமன்றத்தில் பெருமிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீட் தேர்வு வினாத்தாள் மோசடியில் பீகாரைச் சேர்ந்த இருவரை சிபிஅய் கைது செய்தது.
* மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களுக்கு பதவி ஏற்பு செய்யாமல் சென்ற ஆளுநர் மீது மம்தா கடும் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மக்களவை துணைத் தலைவர் பதவி யாருக்கு? என்.டி.ஏ.வா? அல்லது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவரா? விரைவில் அரசு சார்பில் பேச்சுவார்த்தை.
* நாடாளுமன்ற இரு அவைகளிலும் நீட் மீதான விவாதம் நடத்த இந்தியா கூட்டணி கோரிக்கை.
* புதிய குற்றவியல் சட்டத்தில் காவல்துறை அதிகாரங்கள், அறப்போராட்டத்தை இழிவுபடுத்தும் பகுதி, ஹிந்தியில் பெயர்கள்: ஒன்றிய அரசுக்கு கருநாடகா அரசு அளித்த அறிக்கையில் எதிர்ப்பு.
தி டெலிகிராப்:
* ‘வெறுக்கத்தக்க பேச்சு அதிகரிப்பு’: இந்தியாவில் மத சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிக்கை.
* அரசமைப்பு ஜனநாயகத்தின் சின்னம், செங்கோல் முடியாட்சியின் சின்னம். நமது நாடாளுமன்றம் ஜனநாயகக் கோயில், அரசவை அல்ல. அதை அகற்றி, அரசமைப்பு சட்ட புத்தகத்தை வைத்திட சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. சவுத்ரி கோரிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவி கோட்டாவில் தற்கொலை. இந்த ஆண்டு இது 12ஆவது தற்கொலை யாகும்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment