நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத் தொகை அறிவிப்பு முதலமைச்சருக்கு விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 28- நெல் லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக பல்வேறு மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக் கத்துடன், ரூபாய் 206 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதற்காகவும், இந்த ஆண்டு 12.06.2024 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவைத் தொகுப்பு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதற்காகவும், 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு (Kharif Marketing Season) சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காகவும், காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் கே.வி. இளங்கீரன், தஞ்சாவூர் – அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் கோவிந்தராஜ், மயிலாடுதுறை மாவட்ட காவேரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கோபி கணேசன், திருச்சி – தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) மாநிலத் தலைவர் வேட்டவலம் கே. மணிகண்டன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் அக்ரி கா. பசுமை வளவன், தஞ்சாவூர் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்டம் -– குன்றத்தூர், உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் பார்த்திபன், வாலாஜாபாத் வட்டாரம் உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் ஆறுமுகம், காஞ்சிபுரம் மாவட்டம் – உழவர் நண்பர் சந்திரமோகன், இந்திய விவசாயிகள் சங்கத்தின் தனபதி, சேலம் – அய்க்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சங்கரய்யா, பொருளாளர் சரவணன், இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் வாரணாசி இராஜேந்திரன், காவேரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் பாலு, காஞ்சிபுரம் மாவட்ட விவசாய சங்க அமைப்பாளர் ஞானப்பிரகாசம், செங்கல்பட்டு மாவட்டம் – பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவர் தனசேகரன் மற்றும் ஜீவகுமார், இராமுலு, வெங்கடாத்திரி உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா ஆகியோர் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *