அம்மாபேட்டை, ஜூன் 27 தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் தென் கொண்டார் இருப்பு செ.காத்தையன் (வயது 74) அவர்கள் 24-06-2024 அன்று முற்பகல் 11 மணியளவில் உடல் நலக்குறைவால் மறைவுற்றார்.
தென் கொண்டார் இருப்பி லுள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த செ.காத்தையன் உடலுக்கு திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி தோழர்கள் நண்பர்கள் உறவினர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
இரங்கல் கூட்டம்
25-06-2024 அன்று காலை 10 மணி அளவில் மறைந்த செ.காத்தையன் அவர்களின் மறைவையொட்டி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆசிரியர் கோபு.பழனிவேல் காத்தையன் அவர்களின் இயக்கத் தொண்டுகள் மற்றும் அவர் குடும்பத்தை நடத்திய விதம் தன்னுடைய இரு மகன்களையும் இயக்க வாரிசாக உருவாக்கியதை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.
தொடர்ந்து, தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார், அம்மாபேட்டை ஒன்றிய கழகத் தலைவர் கி.ஜவகர், சாலியமங்கலம் கழகத் தலைவர் துரை. அண்ணாதுரை, அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் சாமி. தமிழ்ச்செல்வன். நாயக்கன்கோட்டை குருசாமி, தஞ்சை மாநகர தலைவர் ப.நரேந்திரன், மாவட்ட கழக அமைப்பாளர் அகரப்பேட்டை மா.வீரமணி, திருவையாறு ஒன்றிய கழக அமைப்பாளர் விவேக விரும்பி, மாவட்ட ப.க.துணைத் தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மாவட்ட கழக செயலாளர் அ. அருணகிரி ஆகியோர் இரங்கல் உரைக்கு பின், நிறைவாக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மறைந்த காத்தையன் அவர்களின் பண்பு நலன்கள் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு தந்தை பெரியார் காலம் முதல் தமிழர் தலைவர் ஆசிரியர் காலம்வரை அவரின் அளப்பரிய பணிகள் குறித்து நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், கழக காப்பாளர் மு.அய்யனார், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச. அழகிரி, மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாநகர கழக செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார் கோயில் வெ. நாராயணசாமி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா. துரைராஜ், உரத்தநாடு வடக்கு ஒன்றிய செய லாளர் அ. சுப்பிரமணியன், தஞ்சை மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி. நாகநாதன், தஞ்சை தெற்கு ஒன்றிய அமைப்பாளர் அ.தனபால், மாநகர கழக மகளிரணி செயலாளர் அ.சாந்தி, அம்மாபேட்டை ஒன்றிய துணைத் தலைவர் சூழியக்கோட்டை செள.உத்திராபதி, அம்மாபேட்டை ஒன்றிய துணை செயலாளர் சாலிய மங்கலம் வெ.இராஜேந்திரன், தி.அன்பழகன், கு.அய்யாத்துரை ஆகியோர் மறைந்த காத்தையன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
எந்தவித மூடச் சடங்குமில்லா
இறுதி நிகழ்வு
மறைந்த காத்தையன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் வாழ்வியல் கொள்கையை ஏற்று செயல்படுத்தியவர், அவர் என்ன நினைத்தாரோ, எந்தக் கொள்கையை பேசினாரோ, எந்தக் கொள்கையை வாழ்க்கையில் கடைப்பிடித்தாரோ அதன்படியே அவர் இறுதி நிகழ்வு நடக்க வேண்டும் என்று அவருடைய வாழ்விணையர் தனலட்சுமி அம்மை யாரும், அவருடைய மகன்கள் கா.பிரபாகரன்,கா. இமயவரம்பன், மருமகள்கள் பி.மகாலெட்சுமி, இ.சுபபிரியா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்கி எந்தவித மூடச் சடங்குகளும் இன்றி இறுதி நிகழ்வு நடைபெற்றது என்பது அவர் ஏற்ற கொள்கைக்கு மிகப்பெரிய மரியாதை செலுத்திய நிகழ்வாகும்.
மருத்துவக் கல்லூரியில் உடற்கொடை அளிப்பு
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்கு தன்னுடைய உடலை வழங்க வேண்டும் என்ற அய்யா காத்தையன் விருப்பப்படியே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் பயன்பாட்டிற்காக 25-06-2024 அன்று மதியம் 12.30 மணி அளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் அவருடைய மகன்கள் பிரபாகரன், இமயவரம்பன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார்,இரா.குண சேகரன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாநகர தலைவர் பா.நரேந்திரன்,மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார்,அம்மாபேட்டை ஒன்றிய துணைச் செயலாளர் சாலியமங்கலம் வெ.இராஜேந்திரன், மெடிக்கல் பகுதி கழக செயலாளர் பா.விஜயகுமார், காப்பாளர் மு. அய்யனார், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் தே. பொய்யாமொழி தஞ்சை மாநகர துணைத் தலைவர் அ.டேவிட் உள்ளிட்ட உறவினர்கள் நண்பர்களின் வீர வணக்கத்துடன் காத்தையன் அவர்களின் உடல் ஒப்படைக்கப்பட்டது.