தருமபுரி, ஆக. 25- தர்மபுரி மாவட்டம் பண்டஅள்ளி யில் மேனாள் மாவட்ட தலைவர் மு.பரமசிவம்- மகேஸ்வரி ஆகியோரின் இல்லத்திறப்பு விழா 20.8.2023ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கழக தலைவர் கு.சரவ ணன் தலைமையில் நடை பெற்றது.
மேனாள் மாவட்ட தலைவர் மு.பரமசிவம் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கதிர், கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல் வன், மேனாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, ஆயுள் காப்பீட்டு நிறுவன சங்க பொறுப்பாளர் மாதை யன், ஆகியோர் முன் னிலை ஏற்று வாழ்த்துரை வழங்கினர்.
வீட்டினுள் அமைக் கப்பட்டிருக்கும் பெரியார் புத்தக அலமா ரியை மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி திறந்து வைத்தார். இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் படத்தை காப் பாளர் அ.தமிழ்ச்செல் வன் திறந்து வைத்தார்.
புதிய இல்லத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் திறந்து வைத்து பேசிய தாவது. பண்டஅள்ளி கிராமம் மு.குணசேகரன், மு பரமசிவம், முருகேசன் போன்றவர்களை எல் லாம் உருவாக்கி உள்ளது. அவர்களால்தான் இங்கு தந்தை பெரியாருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
பரமசிவம் தந்தை பெரியார் கொள்கையை யும் தான் செய்யும் ஆயுள் காப்பீட்டு முகவர் பணி யையும் இரண்டு கண் களாக கருதி உழைத்ததி னால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பரமசிவம் ஏற்கெனவே தருமபுரியில் ஒரு வீட்டை கட்டி தமிழர் தலைவரை அழைத்து திறந்து வைத் துள்ளார்கள். பரமசிவம் -மகேஸ்வரி இணையர் களை பாராட்ட வேண் டும். ஏனென்றால் 2 பெண் குழந்தைகள் போதும் என்று கருதி படிக்க வைத்து ஆளாக்கி மருத் துவராகவும், பொறியாள ராகவும் உருவாக்கி இருக்கிறார்கள். தந்தை பெரியார் கொள்கையை கடைப்பிடித்ததால் நல்ல நிலையில் வளர்ந்துள் ளார்கள். தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தமிழில் பூங்குழலி, குழல ரசி என்று பெயர் சூட்டி உள்ளார்கள். பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் கெட் டுப் போனதில்லை என் பதற்கு இவர்களே உதா ரணம். பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் உறவினர்களையும் பாது காக்க வேண்டும். அது தான் நம்மை மேலும் வளர்க்கும் என தமிழர் தலைவர் ஆசிரியர் எழு திய வாழ்வியல் சிந்த னையை மேற்கோள்காட்டி வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ், மேனாள் மாவட்ட இளை ஞரணி தலைவர் காமலா புரம் ராஜா, சாலை பணி யாளர் சங்க மாநில பொறுப்பாளர் சரவ ணன், பென்னாகரம் ஒன் றிய செயலாளர் மு. சங்க ரன், தேவராஜ், முனி. ஆறு முகம், பூங்குழலி ராஜேஷ், ராஜா சாலை பணியாளர் சங்க மாநில பொறுப்பா ளர்கள் சரவணன் பென் னாகரம் ஒன்றிய செயலா ளர் மு. சங்கரன் தேவராஜ் முனி ஆறுமுகம் பூங்கு ழலி ராஜேஷ்குமார், குர லரசி அரவிந்தராஜ், குழ லினி, மதுனிகா, மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட திமுக பொறி யாளர் அணி துணை செயலாளர் உதயகுமார் நன்றி கூறினார்.