27.6.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
* மோடி அரசு நிறைவேற்றிய குற்றவியல் சட்டங்களை ஜூலை 1 முதல் அமல்படுத்த தீவிரம். அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக செய்தி.
* நீட், நெட் தேர்வு மோசடி குறித்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* ஒன்றிய அரசை வலியுறுத்தி ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி தீர்மானம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்; ஒரு மனதாக நிறைவேற்றம்
* ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உடனடியாக தொடங்க வேண்டும்: தீர்மானத்தை இணைத்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* மக்களவை தலைவராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு.
* மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்வு. மக்களவைத் தலைவர் ஒப்புதல்.
* 18ஆவது மக்களவை, பொது மக்களின் குரலை எதிரொலிக்கும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேட்டி.
தி இந்து
* மக்களவை தேர்தல் முடிவுகள் இந்தியா ‘ஹிந்து ராஷ்டிரம்’ அல்ல என்று காட்டுகிறது என அமர்த்தியா சென் கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* நீட் தேர்வு மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, டில்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம். தேசிய தேர்வு முகமை ரத்து செய்யவும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவும் மாணவர்கள் கோரிக்கை.
தி டெலிகிராப்
* நரேந்திர மோடி தலைமையிலான என்.டி.ஏ. அரசாங்கத்தின் ஆட்சிக்கு வந்து 15 நாட்களின் செயல்பாட்டு அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது. நீட் மோசடி, ஜல்பைகுரியில் ரயில் விபத்து, ஜம்மு காஷ்மீரில் நடந்த மூன்று பயங்கரவாத தாக்குதல்கள், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, சுங்கவரி 15 சதவீதம் உயர்வு, சிஎன்ஜி விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு மற்றும் வெளிநாட்டில் 43 சதவீதம் சரிவு ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளது.
* ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் ஆதித்ய ராஜ் சைனி போக்சோ குற்றச்சாட்டில் ஓபிசி கமிஷன் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்.
* காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தால் அவதிப்பட்டுள்ள பூரி ஜகன்னாதர் கடவுளுக்கு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சை.
– குடந்தை கருணா