சென்னை, ஜூன் 27-புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் புலவர் வெற்றியழகன் அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடல் அன்னை மணி யம்மையார் அரங்கத்தில் 25.6.2024 அன்று நடைபெற்றது.
புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் செயலாளர் வை.கலை யரசன் வரவேற்புரையாற்றினார். புதுமை இலக்கியத் தென்றல் தலைவரும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் பொதுச் செயலாளரு மான பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றினார்.
தோழர்கள் கூடுவாஞ்சேரி ராஜு, உடுமலை வடிவேல், மோகன்ராஜ், இரா.மாணிக்கம், கோ.பிச்சைவள்ளிநாயகம், அயன்புரம் துரைராஜ், ஞான.பாலன், சா.தாமோதரன், கி.குமார், அரங்க நாராயணன், பொறியா ளர் ஆறுமுகம் ஆகியோர் கருத்து களை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வழக்குரைஞர் சு.குமாரதேவன் வழிகாட்டும் உரையில், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பை இளைஞர்களிடம கொண்டுச் செல்ல வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து கழக செயலவைத் தலைவர் வழக் குரைஞர் ஆ.வீரமர்த்தினி உரையாற்றி ஆயிரமாவது நிகழ்ச்சியை கொண்டாட ஆலோசனைகளை வழங்கினார். தலைமை வகித்த புலவர் வெற்றியழகன் இறுதியாக நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் கோ.தங்கமணி, தங்க.தனலெட்சுமி, பூவை தமிழ்ச்செல்வன், சுகுமாறன், கவிஞர் வாசல் எழிலன், தி.சு.தேவேந்திரன், கே.என்.மாதேஸ்வரன், சுப தங்கராசு, சீனிவாசன் செல்லமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
எடுக்கப்பட்ட முடிவுகள்
புதுமை இலக்கியத் தென்றலின் ஆயிரமாவது நிகழ்ச்சியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்து 29.7.2024 அன்று சிறப்பாக நடத்த தீர்மா னிக்கிறது. ஆயிரமாவது நிகழ்ச்சியை யொட்டி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகளை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பை மேலும் விரிவாக்கி செயற்குழுவை அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது.
புரவலர் ஆசிரியர் அவர்களின் ஒப்புதல் பெற்ற புதுமை இலக்கியத் தென்றல் புதிய பொறுப்பாளர்கள்
நெறியாளர்: புலவர் வெற்றியழகன்
தலைவர்: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
துணைத் தலைவர்கள் : கோ.பிச்சைவள்ளிநாயகம், கூடுவாஞ்சேரி ராஜு, தங்க.தன லட்சுமி
செயலாளர் : வை.கலையரசன்
துணைச் செயலாளர்கள்: இராவணன் மல்லிகா, ஊடகவியலாளர் ஞான. பாலன்
பொருளாளர்: இரா. மாணிக்கம்
செயற்குழு உறுப்பினர்கள்: பேராசிரியர் தனராஜ், அரும்பாக்கம் சா. தாமோதரன், அயன்புரம் துரைராஜ், பொறியாளர் ஆறுமுகம், கோ. தட்சணாமூர்த்தி, கி.குமார்.