சென்னை, ஜூன் 27- பேரவையில் 25.6.2024 அன்று சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதில் அளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:
* சிறுபான்மையினர் மகளிர்க்கு 2500 மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் வழங்கப்படும்.
* நலவாரியத்தில் பதிவுபெற்ற உலமாக்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ. 1000இல் இருந்து 1200ஆக உயர்த்தப்படும். மூக்குக் கண்ணாடி உதவித்தொகை 500இல் இருந்து 750 ரூபாயாக உயர்த்தப்படும்.
* கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தியும் மற்றும் உறுப்பினர்களின் குடும்பத்தைச் சார்ந்த 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ரூ.1000 கல்வி உதவி தொகையும் வழங்கப்படும்.
* உலமாக்கள் மற்றும் உபதேசியார்களுக்கு நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை இணையவழியில் செயல்படுத்த தனி மென்பொருள் மற்றும் வலைத்தளம் ரூ.25 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
* கடலூர் மாவட்டத்தில் செயல்படும் சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவிகள் விடுதிக்கு ரூ.3.96 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.
* புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதி ரூ.56 லட்சத்தில் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்