திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
1. உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி கடிதம் கொடுப்பது.
2. நீட் பரப்புரை இருசக்கர வாகன பேரணியை விளக்கி சுவர் எழுத்து மற்றும் பிளக்ஸ் விளம்பரங்களை செய்வது பயண குழு தங்கள் ஊருக்கு வரும்பொழுது கழக கொடிகளை ஏராளமாக கட்டிட வேண்டும்.
3. இரு சக்கர வாகன பேரணியில் வருகை தரும் தோழர்களை மாவட்ட எல்லையில் பெருந்திரளாக தோழர்களுடன் சென்று கழகக் கொடிகளுடன் வரவேற்று தங்கள் மாவட்ட எல்லை முடியும் வரை உடன் செல்ல ஏற்பாடு செய்தல்.
4. பயணத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஊர்களில் முக்கிய கடைவீதியில் பயணக் குழுவில் வரும் பேச்சாளர் மட்டும் பேசும் வகையில் காவல்துறை அனுமதி உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
5. பயணத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குழுவில் வரும் குறைந்தது 30 தோழர்களுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு, தங்குமிடம், காலை உணவு வசதிகளை சிறப்பாக செய்து தந்திட வேண்டும்.
6. உள்ளூர் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்து நீட் பரப்புரை வாகன பேரணி செய்தியை ஊடகங்களில் வருவதற்கு ஏற்பாடு செய்தல்.
7. மாநிலக் காவல்துறை அதிகாரிக்கு (டி.ஜி.பி.), தலைமைக் கழகத்தின் சார்பில் பொதுவான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்