கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பாஜகவின் பிடிவாதத்தால் வரலாற்றில் முதல் முறையாக மக்களவை தலைவர் பதவிக்கு தேர்தல்: ஓம் பிர்லாவுக்கு போட்டியாக வேட்பாளரை நிறுத்தியது “இந்தியா” கூட்டணி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு: தற்காலிக மக்களவைத் தலைவருக்கு சோனியா கடிதம்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்கள் (ஏஏஎம்) என மறுபெயரிடுவதற்கான ஒன்றிய அரசின் முடிவுக்கு வடகிழக்கு மாநிலங்களான மிசோரம் மற்றும் நாகாலாந்தில் ’மந்திர்’ என பெயர் இடுவதற்கு எதிர்ப்பு. எங்கள் நம்பிக்கைக்கு எதிரானது என கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*மக்களவையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி யேற்ற பிறகு ஜெய் ஹிந்து ராஷ்டிரா என்று கூறி சர்ச்சை.
தி டெலிகிராப்:
* ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்ட அயோத்தி ராமன் கோவில் கருவறை மண்டபத்தின் கூரை ஒழுகுகிறது: ஒரு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்கவில்லை: தலைமை பூசாரி பரபரப்பு தகவல்.
– குடந்தை கருணா

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *