சென்னை, ஜூன்26- பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரி யும் வாகன ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற கண் பரிசோதனை முகாமினை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத் துப் பார்வையிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்களுக்காக நேற்று (25.06.2024) இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட மாநகராட்சிப் பணிமனையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமினை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து வட்டார அலுவலகங்கள், துறைகள் மற்றும் மண்டலங்களில் பணிபுரியும் 744 நிரந்தர ஓட்டுநர்களுக்காக இந்த பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இந்த கண் பரிசோதனை முகாமானது முதற்கட்டமாக நேற்று (25.6.2024) மற்றும் இன்று (26.6.2024) இராயபுரம் மண்டலத்தில் உள்ள மாநகராட்சிப் பணிமனையில் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக, 2.7.2024, 3.7.2024, 9.7.2024, 10.7.2024 மற்றும் 19.7.2024 ஆகிய நாட்களில் புதுப்பேட்டை பணிமனையின் பின்புறம் அமைந்துள்ள சமுதாய நலக்கூடக் கட்டடத்தில் நடைபெறவுள்ளது.