வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை, ஜூன் 26- நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்தியை வாழ்த்தி வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் ‘‘அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் குரல், மக்களவையில் மேலும் பலமாக ஒலிக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
‘இந்தியா’ என் அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை வரவேற்கிறது, அவரது புதிய பாத்திரத்திற்கு! ராகுல் காந்தி அவர்களின் குரல் மக்கள்மன்றத்தில் (லோக்சபா) தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்.
– இவ்வாறு அவ்வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.