சென்னை, ஜூன் 26- 10 ஆயிரம் கிலோ மீட்டர் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கு மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில்,
10 ஆயிரம் கிலோ மீட்டர் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கிராமங்களில் வாழும் மக்கள் இந்தத் திட்டத்தால் பெரும் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ள ப.சிதம்பரம், சாலைகள் மேம்பட்டால் கல்வி, வர்த்தகம், தொழில் முன்னேற்றம் உள்ளிட்டவை ஏற்படும் என்பது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை என்று தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் மேம்பாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் பாராட்டு!
Leave a comment