14.10.1944 – குடிஅரசிலிருந்து….
திராவிடர் கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டதினால் உண்மைத் திராவிடராய் விட முடியுமா?
திராவிடர் பண்பு உங்களிடம் காணப்பட வேண்டாமா? திராவிடர் கொள்கை உங்களிடம் திகழ வேண்டாமா?
ஆரியத்தையும், ஆரிய வழிபாட்டையும் பின்பற்றுவது திராவிடர் பண்பா என்பதை நெஞ்சில் கை வைத்துப் பாருங்கள்.
இன்று திராவிடர் இவ்வளவு இழிந்த நிலையிலிருப்பதற்குக் காரணம் ஆரியப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி நடந்து வந்ததேயாகும்.
நாம் உண்மைத் திராவிடராக விளங்க வேண்டுமானால் ஆரியப் பண்டிகைகளை முதலில் ஒழித்தாக வேண்டும். இதற்கு இன்று முதல் வாய்ப்பாக உள்ளது. திராவிடர்களை இழிவுபடுத்த எழுதப்பட்டுள்ள தீபாவளிப் பண்டிகையை ஒழிப்பதேயாகும்.
எங்கே, எத்தனை பேர் இம்முறை இத்தீபாவளிப் பண்டிகையை ஒழித்து ஆரியத்தை அழிக்க முன் வருகிறீர்கள் என்பதைப் பார்ப்போம்.