வெப்ப அலையின் தாக்கம் பேரிடராக அறிவிக்கப்படும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

3 Min Read

சென்னை, ஜூன் 25- சென்னை, புறநகர் பகுதிகளில் ரூ.36 கோடியில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு, நிவாரண மய்யங்கள் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள் பின்வருமாறு..

* தூத்துக்குடியில் ரூ.17.50 கோடியில் 2 பல்நோக்கு நிவாரண மய்யங்கள் கட்டப்படும். மழை வெள்ள பாதிப்பிற்குள்ளாகக் கூடிய மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 2 பல்நோக்கு நிவாரண மய்யங்கள் கட்டப்படும். பேரிடர் அல்லாத காலத்தில் பள்ளிக்கூடங்கள் ஆக வும், சமுதாயக் கூடங்களாகவும் செயல்படும்.

* வெப்ப அலையின் தாக்கத் தினை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும்.

* வெப்ப அலை பாதிப்பிற்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் படும்; உரிய நிவாரணம் வழங் கப்படும்.

* காட்டுத்தீ தடுப்பு நடவடிக் கைகளுக்காக வனத்துறை அலுவலர் களுக்காக ரூ.15 கோடியில் உபகர ணங்கள் வழங்கப்படும்.

* ரூ.13.25 கோடியில் 1000 முன்னெச்சரிக்கை அமைப்புகள் நிலச்சரிவு, கடல் கொந்தளிப்பு & அலை சீற்றம் போன்ற பேரிடர்களின் போது பொதுமக்கள், மீனவர்கள், சுற் றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில், அபாய எச்சரிக்கை அறி விப்பு & ஒலி எழுப்பும் கருவிகள் நிறுவப்படும்.

* பேரிடர் மீட்பு நடவடிக்கை களுக்காக படகு, மீட்பு வாகனம் உள்ளிட்ட உபகரணங்கள் ரூ.105.36 கோடியில் வழங்கப்படும்.

* பேரிடரின்போது ரூ.13.25 கோடியில் அபாய எச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்படும்.

* மாவட்ட வருவாய் அலுவலர் களுக்கு ரூ.84 லட்சம் செலவில் 7 புதிய வாகனங்கள் வழங்கப்படும்.

* 1.07 கோடியில் கடலோர மாவட்டங்களில் உள்ள 4960 மீனவர் களுக்கும், 225 மீன்வளத்துறை அலு வலர்களுக்கும் பேரிடர் மீட்புப் பயிற்சி வழங்கப்படும்.

* பொம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் 854 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப் படும்.

* மதுரை மற்றும் கோவையில் மண்டல அளவிலான நில அளவைப் பயிற்சி மய்யங்கள் நிறுவப்படும்.

* நெல்லை ஊர்க்காடு கிரா மத்தில் 1,800 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

* அரக்கோணம் வட்டத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் 500 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.

* பட்டா மாற்றம் மற்றும் புல எல்லைகளை அளவீடு செய்தல் போன்ற சேவைகளை கண்காணித்து அவற்றின் தரத்தினை பேணும் பொருட்டு “தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மய்யம்” அமைக்கப்படும்.

* மேலும் இணைய வழிச் சேவைகளின் புள்ளி விவரங்களை கண்காணிக்கும் வகையில், ‘Dashboard’ உருவாக்கப்படும்.பொதுமக்களுக்கு இணையவழிச் சேவைகள் விரை வாகவும், செம்மையாகவும் வழங்கப் படுவது உறுதி செய்யப்படும்.

* ரூ.2.10 கோடியில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு பேரிடர் மீட்பு அடிப்படைப் பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி, முதலுதவி பயிற்சி மற்றும் இடி பாடுகள், ஆழ்துளை கிணறு, சுரங்கம் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டவர்களையும், நீரில் மூழ்கி யவர்களையும் மீட்பதற்கான 15 வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

* ரூ.6.05 கோடியில் முதலுதவி, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம் தொடர்பான பயிற்சி பல்நோக்கு பாதுகாப்பு மய்யங்கள் அமைந்துள்ள 121 கிராமங்களில் வசிக்கும் 6000 தன்னார்வலர்களுக்கு அளிக்கப்படும்.

* ரூ.2 கோடியில் தமிழ்நாடு தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை மூலம் சென்னை & புறநகர் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களில் உள்ள 500 தன்னார் வலர்களுக்கு பேரிடர் மீட்பு & நிவாரணம் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.

* பதிவுத்துறையில் வழங்கப்படும் வில்லங்கச் சான்றிதழ் போன்று ஒரு புல எண்ணில் குறிப்பிட்ட காலத்தில் இணைய வழியில் நடந்த பட்டா மாற்ற விவரங்களை அறிக்கையாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *