விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 29 வேட்பு மனுக்கள் ஏற்பு

1 Min Read

விழுப்புரம், ஜூன் 25- விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 29 பேரின் மனுக்கள் ஏற்கப் பட்டுள்ளன.

திமுக உறுப்பினர் புகழேந்தி மறைவை தொடர்ந்து, விக்கிர வாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடைந்தது.

மொத்தம் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத் தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (24.6.2024) காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

இதில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 29 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 35 மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் அறிவித்தார்.

முறையாக மனு தாக்கல் செய்தும், வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டதாக சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் மறியலில் ஈடுபட் டதால் சிறிது நேரம் சலசலப்பான சூழல் ஏற்பட்டது.

மனுக்களை திரும்ப பெற நாளை (26.6.2024) கடைசி நாள். அதற்கான அவகாசம் முடிந்ததும், நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இத்தேர்தலில், ஆளும்கட்சியான திமுக சார்பில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக போட்டியிடா ததால், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நில வுகிறது.

வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *