கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் காவல்துறைமீது நடவடிக்கை
தஞ்சாவூர், ஆக.26 கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் காவல்துறை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
திருவாரூர், நாகை மற்றும் மயிலாடு துறை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சட்டம் – ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் காவலர்கள் மத்தியில் பேசுகையில், காவல் துறை யினர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட் டவர்களுக்கு நீதிமன்றத்துடன் இணைந்து தண்டனை பெற்றுத் தருவதுடன், குற்றங்கள் நடைபெறாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். பொது மக்களை நீங்கள் நடத்தும் விதத்தைப் பொறுத்துத்தான் காவல்துறையினர் குறித்த பிம்பம் பொதுவெளியில் கட்ட மைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படு வதை முழுவதும் தடுக்க வேண்டும் எனவும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப் பட்டால், எந்தக் காவல் நிலைய கட்டுப்பாட்டில் போதைப் பொருள் விற்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு, கொலை மற்றும் கொள்ளை போன் றவற்றை தடுக்கவேண்டும் என்று பலமுறை நான் அறிவுறுத்தி யிருக்கின்றேன். இதைத் தொடர்ந்து குற்றங்கள் மிக மிகக் குறைந்துகொண்டு வருகிறது. முழுமையாக குறைந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது…
அது உங்களுக்கும் தெரியும் _ குற்றங்கள் குறைப்பதாக இல்லாமல் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதாக உங்கள் பணி அமையவேண்டும். போதை மருந்து மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமில்லை. எதிர்கால வளர்ச்சிக்கும் அது தடை யாக இருக்கிறது. மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு குட்கா, பான்மசாலா போதைப்பொருளின் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். கடந்த 2 ஆண்டுகளாக ஆகஸ்ட் 11 அன்றைக்கு என் தலைமையில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்தியதை நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடு மையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இனி கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை கண்டறி யப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்த வரை, பள்ளி மாணவர் களிடையே பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் குற்றவாளிகளுக்கு ஃபோக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றுதர சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்குதல் மற்றும் ஃபோக்சோ வழக்குகளை தீவிரமாக கண்காணித்து தண்டனை பெற்றுத் தரும் வரை தொடர் கண் காணிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் உங்கள் வரம்புக்குள்ளாக பதியப்படும் அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து கண்காணித்து சரியான நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை நீங்கள் உறுதி செய்யவேண்டும் •நீதிமன்ற நிலுவை வழக்குகளை கண்காணித்து, சாட்சிகள் மற்றும் தேவையான தரவுகளை நீதிமன்றத்தில் வழங்கி தண்டனை பெற்று தரவேண்டும் குற்றப்பத்திரிகை பதியப்பட்டு நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்படாத வழக்குகளை உடனடியாக நீதிமன்றங் களுக்கு கொண்டு செல்லவேண்டும் நீதிமன்றங்களுடன் இணைந்து இந்தப் பணிகளை துரிதப்படுத்தி உடனடியாக தண்டனை வாங்கித் தந்தால் மட்டும்தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும்.
காவல் நிலையத்தில் வரவேற்பாளர்கள்
பொதுமக்கள் காவல் நிலையங் களுக்கு வரும்போது அவர்களை நீங்கள் நடத்துகின்ற விதத்தைப் பொறுத்துத்தான் காவல்துறையின் பிம்பம் கட்டமைக்கப்படும். அதை உணர்ந்து பொறுப்புடனும் கனிவுட னும் நடந்துகொள்ள வேண்டும். இதற்காகத்தான் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்களை நியமித்திருக்கிறோம்.
அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதை காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் ஆகியோர் உறுதி செய்யவேண்டும். ”முதலமைச் சரின் முகவரி” திட்டத்தின்கீழ் பெறப் படும் மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சரியான தீர்வு காணப் படவேண்டும்
பொதுமக்கள் மிகவும் நம்பிக் கையோடு எனக்கு மனுக்களை அனுப்புகிறார்கள் எனவே, சட்டப்படி மேல்நடவடிக்கை எடுத்து, அந்த விவரங்களை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இது பற்றி நானே மனு தாரர்களிடம் பேசித் தெரிந்துகொள்ளப் போகிறேன். காவல் துறையினரால் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள இருக் கிறேன்.
அதனால், ஒவ்வொரு மனு மீதும் சரியான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தவேண்டும் என்று நான் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தேன்.
சில மாவட்டங்களில், காவல் கண்காணிப்பாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இப்படியான புகாருக்கு இடமில்லாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் நம்பிக்கை யுடன் உங்களிடம் குறையை சொல்ல வரும்போது, மாவட்ட காவல் கண் காணிப்பாளர்கள் கண்டிப்பாக அங்கு இருக்கவேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.