காரைக்குடி ஜூன் 25- காரைக்குடி கழக மாவட்ட மேனாள் தலைவர் ச.அரங்கசாமி 24-06-2024 அன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வுகள் வீர வணக்க கூட்டம் தலைமைக் கழக அமைப்பாளர் கா.மா.சிகாமணி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர் மு.சு.கன்மணி, கழக தொழில்நுட்ப குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி, தேவகோட்டை ஒன்றிய செயலாளர் வாரியன்வயல் ஜோசப், நகர ப.க. தலைவர் கி.மணிவண்ணன்,
தேவகோட்டை ஒன்றிய ப.க. அமைப்பாளர் அரவரசன், தேவ கோட்டை நகர ப.க. அமைப்பாளர் சிவ.தில்லைராசா, தேவகோட்டை நகர கழக செயலாளர் ந.பாரதிதாசன், சாமி.திராவிடச்செல்வம், தி.தமிழ்ச்செல்வி, தி.புரூனோ என்னாரெசு, சொ.ஜான்சிராணி,
இராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம்.முருகேசன், நகர தலைவர் ந.செகதீசன், நகர செயலாளர் தி.கலைமணி, கல்லல் ஒன்றிய தலைவர் பலவான்குடி ஆ.சுப்பையா, கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ.பாலு, காரைக்குடி நகர ப.க. அமைப்பாளர் ஆ.பாலகிருட்டிணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செ.நதியா, மாவட்ட ப.க.எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் ந.குமரன்தாசு, மாவட்ட ப.க. தலைவர் எஸ்.முழுமதி, தேவகோட்டை நகர தி.க. தலைவர் வீர.முருகப்பன், பேரா.கிருட்டிணமூர்த்தி, தி.தொ.ச. மாவட்ட தலைவர் சொ.சேகர், சி.பி.அய். சார்பில் பழ.இராமச்சந்திரன், காரைக்குடி மாநகராட்சி மேயர் சே.முத்துத்துரை, சாக்கோட்டை ஒன்றிய மேனாள் பெருந்தலைவர் சுப.முத்துராமலிங்கம், தேவகோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் க.பூபாலசிங்கம், உள்பட கழகத் தோழர்களும் உறவினர்களும் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். அவரது சொந்த ஊரான சாலைக்கிராமம் பஞ்சாத்தியில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அனுப்பிய இரங்கல் செய்தி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
முதுபெரும் பெரியார் தொண்டர் காரைக்குடி ச.அரங்கசாமி மறைவு! கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
Leave a Comment