தருமபுரி ஜூன் 25- தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பயின்று அதே கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் செலையன் 23-6-2024 அன்று காலை 6 மணி அளவில் தருமபுரி இல்லத்தில் மறைவுற்றார்.
அவரது உடலுக்கு மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் க. கதிர் நகர கழக தலைவர் கரு. பாலன், வீ. சிவாஜி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் சாமி, தனராஜ், கவுரவன், ஹரிதாஸ், கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேராசிரியர் செலையன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி, பேராசிரியர் செலையன் வாழ்விணையர் கண்ணகி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பேராசிரியர் செலையன் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராக பணியாற்றியபோது கல்லூரியில் முத்தமிழ் மன்றம் அமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக பேராசிரியர் அ.இறையன், கு.வெ.கி.ஆசான், சேலம் அ. அருள்மொழி ஆகியோரையெல்லாம் அழைத்து வந்து கல்லூரியில் பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொண்டவர், பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தவர் பேராசிரியர் செலையன் என் பது குறிப்பிடத்தக்கது. அவர் பேராசிரியராக இருந்த காலகட்டத்தில் அவரிடம் படித்த மாணவர்கள் பலரும் பகுத்தறிவாளர்களாக உருவாக்கப் பட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.