தஞ்சாவூர், ஆக.26 டில்லியில் அடுத்த மாதம் 2 நாட்கள் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக உலகிலேயே பிரமாண்டமான வெண்கல நடராஜர் சிலை தஞ்சாவூர் அருகே சுவாமிமலையில் உருவாக்கப்பட்டு டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
ஒவ்வாரு நாடும் வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு தொடர் பாக பிற நாடுகளுடன் கூட்டமைப் புகளை ஏற்படுத்தி உள்ளன. இதில் ஒன்று தான் ஜி 20 கூட்டமைப்பு. இதில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் என மொத்தம் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த ஜி20 கூட்டமைப்பில் இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்தி ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தோ னேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரே பியா, தென்ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் அய்ரோப் பியா ஒன்றியம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டுக்கு ஒவ்வொரு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் தலைமை வகிக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு 2 நாட்கள் நடந்தது. இதையடுத்து ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியா விடம் ஒப்படைக்கப்பட்டது. .
இதையடுத்து 2023இல் ஜி20 மாநாட்டை இந்தியாவில் சிறப் பாக நடத்த இந்தியா திட்டமிட் டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி20 மாநாடு நடை பெற உள்ளது. இதில் பிற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் தான் ஜி20 மாநாட்டின் அரங்கின் அருகே பிரமாண்டமாக நடராஜர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சிலை என்பது தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் செய்யப்பட் டுள்ளது.
மொத்தம் 19 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை 28 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் இந்த சிலை தான் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை என கூறப்படுகிறது.
நடராஜர் நடனம் ஆடுவதை குறிக்கும் இந்த சிலையை ஜி20 மாநாட்டில் இடம் பெற செய்ய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பமாம்.
இதையடுத்து நடராஜர் சிலை வெண்கலத்தில் வடிவமைக்கப்பட் டுள்ளது. இதன் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது. ஜி20 உச்சி மாநாட்டுக்கான 28 அடி உயர நடராஜர் சிலையை உருவாக்கி உள்ளனர்.
அதாவது சிலை என்பது 22 அடி உயரத்திலும், பீடம் 6 அடி என 28 அடியில் காட்சியளிக்கும்.
இந்த சிலை வாகனத்தில் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது.
இந்த சிலை என்பது ஜி20 மாநாடு நடைபெற உள்ள டில்லியின் பிரகதி மைதானத்தில் இடம் பெற உள்ளது.